Translate

Thursday, April 25, 2013

நெல்லிக்காய் பற்றிய தகவல்



        ன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம், பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.
நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர். தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
           பெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று கருதி கார்த்திகை மாதத்தில் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூஜிக்கின்றனர். இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.

ஐந்து சுவை கொண்டது

ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.

உயிர்சத்துக்கள்

உயிர்ச்சத்துக்களான ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்ஸ் தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.

பித்தம் தணிக்கும்

ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும்.

உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி விடுகிறது. கல்லீரல் குறைபாட்டை நீக்குகிறது. இரைப்பை அழற்சியை போக்கி அல்சர் வராமல் பாதுகாக்கிறது. மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.

நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும்.

நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.

பெண் இனப்பெருக்க உறுப்பிற்கு பாதுகாப்பையும், உறுதியையும் தருகிறது.

நினைவாற்றல் கூடும்

பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.

குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது. பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.

சீரான ரத்த ஓட்டம் நடைபெறவும், இதயம் பலம் பெறவும் உதவுகிறது. ரத்த ஓட்டத்தின் போது நச்சுக்கிருமிகள் பரவாமல் பாதுகாக்கிறது. ரத்த நாளங்கள் சீராக இயங்கவும் உதவுகிறது. கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.

பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
.

சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

No comments:

Post a Comment