[ சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் ]
தற்போது மேலை நாடுகளில் பசும்பாலை நெருப்பில் வைத்து காய்ச்சாமல் பச்சை பால் உண்ணும் முறை என்பது வேகமாக பரவி வருகின்றது.இதில் ஏராளமான நன்மைகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.பொதுவாக இன்று நம்மிடையே பால் என்பது பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு இரசாயண முறையில் பதப்படுத்தப்பட்டு நமது தேவைக்கு விற்கப் படுகின்றது. இதில் சில தீமைகளும் சேர்ந்தே உள்ளது.அதாவது Pasteurization என்னும் சுத்தி கரிப்பு என்பது குறிப்பிட்ட அளவில் பாலை கொதிக்க வைத்து பாக்டீரியாவை அளிக்கும் முறையாகும்.இம் முறையால் பாலில் உள்ள Vitamin C - 20% சதவீதம், Vitamin B1 10% சதவீதம் அழிந்து விடுகின்றது. மேலும் பாலில் உடலுக்குத் தேவை யான நன்மை செய்யும் பாக்டீரியாவும் அழிந்து விடுகின்றது. இதனை உணர்ந்த மேலை நாட்டினர் Pasteurization முறையில் சுத்தி செய்யாத பாலை உண்ண விரும்புகின்றனர்.
