Translate

Showing posts with label Philosophy. Show all posts
Showing posts with label Philosophy. Show all posts

Thursday, February 28, 2013

தேசிய அறிவியல் தினம் - Feb 28

(சர்.சி.வி.ராமன், 'ராமன்விளைவை' கண்டறிந்தநாள் - Feb 28)

Sir. C.V.Raman
            அவனுக்கு வெங்கட்ராம் என்று பெயர் வைத்தார்கள். ஆனால், எல்லோரும் ராமன் என்றே அழைத்தார்கள். ராமன் பிறந்தது திருச்சியில் இருக்கும் திருவானைக்காவல். அப்பாவின்பெயர், சந்திரசேகர். அவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியர். அம்மா, சப்தரிஷிபார்வதி. ராமனையும் சேர்த்து வீட்டில் ஐந்து குழந்தைகள். அதில் ராமன் இரண்டாவது பிள்ளை.

ராமனுக்கு மூன்று வயதாக இருக்கும் போது அம்மாவோடு அவர்கள் விசாகப்பட்டினத்துக்கு மாறினார்கள். மற்றபிள்ளைகள் போல் இருக்காமல், ராமன் எப்போதும் அம்மாவோடு ஒட்டிக்கொண்டு,  ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு நச்சரிப்பான்.

ஒளி மற்றும் ஒலி ஆகியன பற்றியே திரும்பத்திரும்ப அவனது கவனம் சுழன்றது. விசாகப்பட்டினத்தில் ஒன்றாம் வகுப்புப்படிக்கும் போது என்ன செய்தான் தெரியுமா?