Translate

Wednesday, April 17, 2013

மூளையில் வருது மின்சாரம்!



                       “நாம் சாதாரணமாக 10 சதவீத மூளையைத்தான் பயன்படுத்துகிறோம். 100 சதவீதம் பயன்படுத்தினால், விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போல் இருப்போம்’’ என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால், அந்தத் தகவல் சரியல்ல. உண்மையில் நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளைதான். ருசி, வாசனை, தொடுதலை அறிதல், சிந்தித்தல், பேசுதல் என நம் மூளை ஓயாது எந்நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது

மூளை பற்றிய சில தகவல்கள்...

*
வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோகிராம்.

* ஒவ்வொரு நொடியும் நமது மூளைக்குள் 1 லட்சம் அமில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலே நடக்கின்றன.

*
நமது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரித்து நீட்டினால், 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அவை நீளுமாம்.

*
மூளையில் 2 வயதில் தான் மிக அதிக செல்கள் அமைகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன.

*
வாழ்க்கையில் மூளை, குவாட்ரிலியன்... அதா வது, 10 கோடியே கோடி தகவல் களை தனித்தனியாக தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது!

* 18
வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது.

*
நம் மூளை செயல்படும்போது 10 முதல் 23 வாஅளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

*
மனித உடலில் உள்ள ரத்தத்திலும் ஆக்சிஜனிலும் 20 சதவீதத்தை மூளைதான் பயன்படுத்துகிறது.

*
மனித மூளை மணிக்கு 431 கி.மீ வேகத்தில் செயல்படக் கூடியது.

*
வலியை அறியும்போது ஆணின் மூளை வேறு மாதிரியும் பெண்ணின் மூளை வேறு மாதிரியும் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

*
பெண்களுக்கான சிறப்பு ஹார்மோனாக அறியப்படும் ஈஸ்ட்ரொஜன் நினைவுத் திறனை வளர்க்கக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் பெண்கள் அதிக ஞாபகசக்தியோடு இருக்கிறார்கள் போலும்.

*
மனிதர்கள் எல்லோருக்குமே கனவுகள் வரும். சிலர் அதை மறந்துவிட்டு, ‘கனவு காணுவதில்லைஎன்று சொல்வதுண்டு. உண்மையில் கனவுதான் மூளையின் உடற்பயிற்சி. நாம் விழிப்புடன் இருப்பதை விட கனவு காணும்போதுதான் மூளை அதிக செயல் திறனுடன் இருக்கிறதாம்.

*
நாம் சிரிக்கும்போது நம் மூளையின் வெவ்வேறு ஐந்து பகுதிகளில் பலமான தாக்கம் ஏற்படுகிறது. மூளைக்கு அது கடும் வேலைதான்.

*
இடது கை பழக்கம் கொண்டவர்களின் மூளையில் கார்பஸ் கொலாசம் என்ற பகுதி வலது கை பழக்கம் கொண்டவர்களை விட 11 சதவீதம் பெரிதாக இருக்கிறது.

*
சமீபத்திய ஆராய்ச்சிப்படி மூளை கசக்கிப் பிழியப்படும் டாப் 3 டென்ஷன் வேலைகள்...
                           1.
அக்கவுன்டன்ட்
                           2.
நூலகர்
                           3.
டிரக் டிரைவர்

மூளை எடை:

பிறந்த குழந்தை 350-400 கிராம்

யானை 4783 கிராம்

பசு 425-458 கிராம்

தங்கமீன்    0.097 கிராம்

பீகிள் நாய்  532 கிராம்

கொரில்லா குரங்கு 465-540 கிராம். 


No comments:

Post a Comment