Translate

Showing posts with label Reasons for Pimples. Show all posts
Showing posts with label Reasons for Pimples. Show all posts

Monday, July 8, 2013

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்!


            பெரும்பாலான பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக அழகை பாதிக்கின்றன.உடலில் இருக்கின்ற கழிவு, அதிகப்படியான உள்ளிடை சுரப்பு போன்றவற்றால் பருக்கள் உருவாகிறது. அதிகப்படியான ஹார்மோன் சுரக்கையில், அது தோலின் வழியே வெளியேற முற்படும்போது பருக்கள் ஏற்படுகிறது.
பித்தம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரும். அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் உஷ்ணம், தூசி கலந்து பருக்களை உண்டாகலாம். எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால், பருக்கள் வரலாம். சருமத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால், பருக்கள் வரும். பெரும்பாலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடலில் உஷ்ணம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரலாம்.