Translate

Showing posts with label Features of Win 7. Show all posts
Showing posts with label Features of Win 7. Show all posts

Friday, March 22, 2013

விண்டோஸ் 7 தரும் வசதிகள்




             புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் 

பெற்று  பயன்படுத்தத் தயங்குபவர்கள், இப்போது விண்டோஸ் 7 

தொகுப்பினையே பெறுகின்றனர். அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் 

பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படுகின்றனர்.

விஸ்டாவின் தோல்விக்குப் பின் வந்த இந்த சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட்

நிறுவனம் பல கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது. பல புதுமைகளையும் 

ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.


1. கீ போர்டு ஷார்ட் கட்ஸ்:

விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் 

மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம்.

H : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.

I : அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.