பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல்
வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில்
அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய
மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள்
நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம்
இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக
, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர
வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில்
மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது
தவறு.
