தாவரப் பெயர் :- CORIANDRUM SATIVUM
தாவரக்குடும்பம் :- UMBELLIFERAE (Apiaceae)
கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது
இந்தியா முழுதும் காணப்படும். இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது.
சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக்
கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின்
காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக
இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.

