நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியைத் தலைவலி என்கிறோம். தலைவலி என்பது எல்லா தரப்பினருக்கும் வருகின்ற பொதுவான நோய் என்றாலும். அது வரப்போகும் நோய்களுக்கு அறிகுறி என்பதே சரி. பெரும்பாலான தலைவலிகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி விட முடியும்.
நம் முகத்தில் தசை நார்கள் அதிகமாக இறுக்கப்படுவதினால்தான் பெரும்பாலான தலைவலிகள் ஏற்படுகின்றன. தசை நார்கள் அதிக நேரம் இழுக்கப்படும்போது, கடைசியில் அது தலைவலியாக உருவெடுக்கின்றது. தலைவலி வருவதற்கு கடுமையான உழைப்பு, ஓய்வின்மை, உடல் சூடு, வயிற்று நோய்கள், போதிய உணவின்மை, மன அழுத்தம் ஆகியவை காரணங்களாகும்.
25 வருடங்களாக தலைவலியை ஆராய்ச்சி செய்த டாக்டர் ஹென்றி ஆக்டென் என்பவர், டென்ஷன் தலைவலியைப் பற்றி சில ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளார். டாக்டர்கள், எஞ்சினியர்கள், ஐ.டி பணியாளர்கள் போன்றவர்களுக்கு 80 சதவீதமும், வியாபாரிகளுக்கு 77 சதவீதமும், எழுத்தாளர்கள், அரசுப் பணியாளர்களுக்கு 70 சதவீதமும், உடல் உழைப்பை அளிக்கும் தொழிலாளர்களிடம் 55 சதவீதமும் டென்ஷன் தலைவலி காணப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
தலையின் ஒருபுறம் மட்டுமே ஏற்படும் மைக்ரைன் ஒற்றைத் தலைவலி, மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. இது இரவு நேரத்தில்தான் அதிகரிக்கும். மூளையின் ரத்த நாளங்களில் ஏற்படும் ஒருவித மாற்றமே இதற்குக் காரணம்.
எல்லா தலைவலிகளுக்கும் மருத்துவத்தில் தீர்வு உண்டு. ஆனால், சில டார்ச்சர் பார்ட்டிகளால் வரும் தலைவலிக்கு இன்னும் தீர்வு கண்டுபிடிக்கவில்லை!
No comments:
Post a Comment