பண்டைய கிரேக்கத்தில் கிமு 776 முதல் ஜியஸ் எனும் கிரேக்க கடவுளை போற்றும் வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வந்தன. போட்டிகளில் அடிமைகள் அல்லாத ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். வெற்று உடம்போடு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி. பெண்களின் நுழைவை தடுக்க இப்படி ஒரு முறை பயன்பட்டது.
தியோடோசிஸ் எனும் மன்னன் நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக கிறிஸ்துவத்தை ஆக்கிய கிபி 394 இல் இருந்து ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கு மத நம்பிக்கைக்கு எதிரானது எனத்தடை போட்டார்.
பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833 இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
குபர்டீன் எனும் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் இவ்விளையாட்டை துவங்குவதற்கான முயற்சிகளை எடுத்தார். ஏற்கெனவே ஜப்பாஸ் எனும் செல்வந்தர் அப்பெயரில் போட்டிகளை நடத்தி இருந்தார். பண்டைய ஒலிம்பிக் நடந்த மைதானத்தை அவரைக்கொண்டு சீரமைத்தார்கள்.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த கிரேக்கத்தில் போட்டிகளை நடத்த வேண்டும் என்றபொழுது எதிர்ப்புகள் கிளம்பின. கிரேக்க இளவரசரை புத்திசாலித்தனமாக குபர்டின் குழு தலைவர் ஆக்கினார். அவரே முன்னின்று நிதி திரட்டினார்.போட்டிகள் ஆரம்பமாகின. பதின்மூன்று நாடுகள்தான் முதல் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டன.
முதல் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் இல்லை. முதல் பரிசு வெள்ளி பதக்கம், -பாராட்டு பத்திரத்துடன் தலையில் சூட்டுவதற்கு ஆலிவ் இலைகளால் தயாரிக்கப்பட்ட கிரீடமும், இரண்டாம் பரிசாக வெண்கல பதக்கம், பாராட்டுப் பத்திரத்துடன் புன்னை இலைகளால் தயாரிக்கப்பட்ட கிரீடமும் உருவாக்கப்பட்டன. மூன்றாம் பரிசு கிடையாது. மொத்தம் இருபத்தி ஒன்பது ஆண்டுகள் ஒலிம்பிக் கமிட்டி தலைவராக குபர்டின் செயலாற்றினார். அவரின் கனவு இன்றைக்கு மிகப்பெரும் உயரங்களை தொட்டிருப்பதை காண்கிறோம் இல்லையா? சிவீtவீus, கிறீtவீus, திஷீக்ஷீtவீus (வேகமாக, உயரமாக, வலிமையாக ) என அவர் வகுத்த ஒலிம்பிக்கின் தாரகமந்திரம் ஒலிம்பிக் விளையாட்டுக்கும் பொருந்தி வந்திருக்கிறது.
No comments:
Post a Comment