Translate

Thursday, August 22, 2013

கரிசாலை குடிநீர்




“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”


என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள்.


.
     அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை   

கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத்

தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.



     வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 


கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 

35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு 

சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு 

பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து

காலை, மாலை தேநீருக்குப் பதிலாக 

அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம்

சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் 

அருந்தலாம்.


       கரிசாலை இரத்த சோகையைப் போக்கக்


 கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற

 நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.

 இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.



No comments:

Post a Comment