Translate

Saturday, May 18, 2013

85 நாட்களில் விளையும் புதிய மக்காச்சோளம் கண்டுபிடிப்பு



      குஜராத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்காக 85 நாட்களுக்குள்ளேயே அறுவடைக்கு தயாராகிவிடும் புதிய மஞ்சள் நிற மக்காச்சோளத்தை அனந்த் விவசாய பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. குஜராத்தில் 4.23 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. ஆண்டுக்கு 6 லட்சம் டன் சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. பழங்குடியின மக்கள் பெரும்பாலும் சோளத்தைதான் பயிரிடுகின்றனர். இவர்கள் பயிரிடும் சோளம், அறுவடைக்கு தயாராக குறைந்தபட்சம் 120 நாட்கள் வரை ஆகின்றன.
 
    குஜராத் மாநில பழங்குடியின மக்களுக்காக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹிசார் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஹைகுவாலிட்டி புரோட்டீன் மைஜ்-1 என்ற பெயரில் புதிய மக்காச்சோளம் கண்டுபிடித்து அளிக்கப்பட்டது. இந்த மக்காச்சோளம் உட்பட வேறு எந்த சோளத்தையும் விட அதிகளவில் விளையக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் புதிய சோளத்தை அனந்த் விவசாய பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது. இதற்கு குஜராத் அனந்த் மஞ்சள் ஹைபிரிட் மைஜ்-1 (கேயம்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

     மற்ற வகை மக்காச்சோளம், ஒரு ஹெக்டேரில் அதிகபட்சமாக 1,439 கிலோ விளைகின்றன. ஆனால், கேயம் சோளம், ஒரு ஹெக்டேருக்கு 4,000 கிலோ வரை விளையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 85 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும் என்றும், காரீப் பருவத்தில் பழங்குடியினர் பகுதியில் பெய்யும் அதிகளவு மழையையும் இது தாக்குப்பிடிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment