நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.
ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.
ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.
குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.
ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.
யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.
சிகிச்சை முறை:
குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.
அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தால் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்யலாம்.
முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியான தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின்போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்கள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடைப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.
இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத்தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனையில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்நட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.
அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்டரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படும். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.
ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார்கள் டாக்டர்கள்..
it will so useful in snoring prevention
ReplyDelete