இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.
நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி இல்லை என்றால் இஞ்சியுடன், கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்.. தொண்டைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அரு மருந்தாகும்.பித்தம் அதிகமாகி தலைசுற்றல் ஏற்பட்டால் வாழ்க்கையில் விரக்தி ஏற்படுவதுண்டு. எனவே, சுக்குத்துளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். மருத்துவகுணம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல் போன்றவைகளில் சேர்த்து சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் குணமாகிவிடும்.
வெள்ளைப்பூண்டு:
பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது. தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதய அடைப்பை நீக்கும். ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும். சளித்தொல்லையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சளித்தொல்லை இருந்தால் வெள்ளை பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டால் போதும். சளி தொல்லை நீங்கும்.
ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் துளசி சாற்றை சாப்பிடுவது நல்லது. உடலில் தடைபட்டிருக்கும் ரத்த குழாயை துளசி சாறு குணப்படுத்தும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து விடும். நாம் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் சில உணவுப்பொருட்களில் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம். வெங்காயத்திலும், வெள்ளைப்பூண்டிலும் உள்ள ‘செலினீயம்‘ என்னும் உலோகப்பொருள் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
நரம்பு தளர்ச்சி சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் வருகிறது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சத்தான உணவை உட்கொள்ளாமை போன்றவைகளால் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க:
நன்றாக உறங்க வேண்டும்.மன அளவிலும், உடல் அளவிலும் உடலைப் பாதுகாக்க வேண்டும். உறங்குவதற்கு முன் அதிக நீரைப் பருக வேண்டும்.தூங்குவதற்கு முன் சூடான பானம் எதுவும் அருந்த கூடாது. தொண்டைப்புண்: தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்படுவோருக்கு பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியவை உதவும்.மிளகு, சீரகத்தை வறுத்து பொடி செய்து கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது மஞ்சளைப் பொடியாக்கிவிட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு கொதிக்க விடவும். பின் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யை சேர்த்து கலக்கி குடித்தால் தொண்டையை தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு ஏற்படும்.
உடல் தளர்ச்சி:
வெங்காயத்தில் வைட்டமின் ஏ.பி.சி. ஆகியவை உள்ளன. உடல் தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். இருதயத்தை வலுப்படுத்தும். உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியை திரும்பவும் தரக்கூடியது. இளமையைப் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து, காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.
வயிற்றுப்புண்:
வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் ஒரு டீஸ்பூன், நிறைய பூண்டு போட்டு நன்றாக வேக வைத்து தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண்ணும், வாய்ப்புண்ணும் குணமாகிவிடும்.
வலிப்பு நோய்:
வலிப்பு வந்தவுடன் பார்லி அரிசியில் இளநீரையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் நரம்பு பலமடைந்து வலிப்பு குணமாகும்.
தலைவலி:
தலைவலி வந்தால் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு கலந்து சிறிது உப்புடன் சேர்த்துப் பருகினால் தலைவலி உடனே குணமாகும்.
நெல்லிக்காய்:
நெல்லிக்கனியில் வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட சுமார்25மடங்கு சத்து அதிகமாக நெல்லிக்கனியில் உள்ளது. இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், புரதச்சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது. பல் தொடர்பான வியாதிகள், மலச்சிக்கல், எலும்புத்தாடை, நீர்த்தாரையில் உள்ள புண் போன்றவற்றை குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம். அதே போல் மூளைக்கோளாறு, இதய நோய், காசநோய், ஆஸ்துமா, நீரிழிவு போன்ற நோய்களை குணமாக்குவதில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கற்றாழை
கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துகள், புரோட்டீன்கள், என்சைம்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங்களுடைய உப பொருட்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை உடலிற்கு எனர்ஜியை தரக்கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்குவது. மூளையில் ரத்தம் உறைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, ஜீரண சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்கு கற்றாழை நல்ல பயன் தருகின்றது. தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான்.
No comments:
Post a Comment