Translate

Monday, February 24, 2014

தேங்காய்


              தேங்காய் நல்லதா, கெட்டதா என்பதில் பலருக்கும் பலவிதக் கருத்துகளும் கேள்விகளும் உண்டு. கேரளா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும்  இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேங்காய் இல்லாமல் சமையல் ருசிப்பதே இல்லை. சாம்பாரோ, ரசமோ, கூட்டோ, பொரியலோ, வேறு  எந்த உணவோ... அதில் பிரதானமாக இடம் பெறுவது தேங்காய். அவர்களுடன் ஒப்பிடும் போது, நம்மூரில் தேங்காயின் உபயோகம் சற்று  குறைவுதான். அதிக தேங்காய் ஆபத்தானது என்று அதைத் தவிர்ப்பவர்கள் ஒரு பக்கம்... 

நோய்களை தகர்க்கும் முருங்கை

       

                  இன்றைய சூழ்நிலையில் நோய் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்கிற நிலை உள்ளது. உணவு, தண்ணீர், காற்று போன்றவைகளால் ஏராளமான  நோய்கள் உருவாகி மக்களை தாக்குகின்றன. தற்போது விவசாய நிலங்கள் பெருமளவில் குறைந்து வருகிறது. என்றாலும் இருக்கும் இடத்தில்  விவசாயம் செய்கின்றனர். ஆனால் இவை இயற்கையான முறையில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் ரசயான உரங்களை கொண்டு உணவு  பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த ரசாயன உரமானது உணவு பொருட்களுடன் சேர்ந்து நமது உடலுக்குள் தஞ்சமடைந்து விடுகிறது. 

செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்து



       ஜீரணம் ஆகாமல் அவதி படுவோர்கள் வீட்டிலேயே மருந்து தயாரித்து பருகலாம். வீட்டில் இருக்கும் சுண்டைக்காய், பெருங்காயம், பூண்டு, ஓமம், சீரகம் என அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களும் உடல் நலத்தை காப்பதற்கு மிகவும் உதவுகிறது. சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, நீர் மோர் ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒரு சுண்டைக்காய் அளவு பெருங்காயத்தைப் பொடித்துப் போட்டு கலக்கி, 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகளை நீக்கும். 

ஞாபகசக்தியை அதிகரிக்கும் இஞ்சி


           இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது
நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு  ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி  ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி இல்லை என்றால் இஞ்சியுடன், கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால்  நன்கு பசி எடுக்கும்.

Sunday, February 23, 2014

கவனத்தில் கொள்ள வேண்டியவை


    சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.
    உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

    அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.