Translate

Monday, July 8, 2013

ஒற்றைத் தலைவலியா?


பலரையும் அவதிப்படுத்துவது, ஒற்றைத் தலைவலி. அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? இதோ சில வழிகள்…
உணவு முறையில் மாற்றம்:சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவு வகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால், நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் சாப்பிட வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

முறையான தூக்கம்: தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் காலையில் எழுந்ததும் தலைவலிப்பதாகச் சொல்வது வாடிக்கையாகிவிட்டது. அதனால், நல்ல தூக்கம் வரச் செய்யும் வழிமுறைகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, படுக்கப் போகும்முன் இளஞ்சூட்டில் பால் அருந்தலாம்.
உடற்பயிற்சி: உடற்பயிற்சி தான் உடலில் உள்ள வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. இதனால் மூளை நன்கு செயல்படத் தொடங்கும். முறையான தொடர் உடற்பயிற்சி இருந்தாலே ஒற்றைத் தலைவலி அண்டாது.
சுற்றுச்சூழலில் கவனம்: கடுமையான வெயில், வானிலை மாற்றங்கள், காற்றோட்டமில்லாத புழுக்கமான சூழலில் வாழுவது ஆகிய சுற்றுச்சூழல் நிலைகளாலும் சிலருக்குத் தலைவலி வரும். அதனால் இவற்றைத் தவிர்க்க வேண்டும். காற்றோட்டமுள்ள இடத்தில் தூங்குவதும், மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்வதும் மிகவும் முக்கியம்.
மது, புகை, காபி தவிர்த்தல்: மது அருந்துதல், புகை பிடித்தல், காபி அருந்துதல் ஆகியவை சிலருக்குத் தலைவலியை ஏற்படுத்தும். இவை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். சிலருக்கு காபி சாப்பிட்டால் தலைவலி நிற்பது போலத் தெரியும். ஆனால் அது நிரந்தரமற்றதாகும்.
கவலை, சோர்வு, மனஅழுத்தம்: அதிகமாகக் கவலைப்படுபவர்கள், அடிக்கடி சோர்வு அடைபவர்கள், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஒற்றைத் தலைவலி வரும். இவற்றில் இருந்து விடுபட, மற்றவர்களுடன் நட்பாகப் பேசிப் பழக வேண்டும். மனம் விட்டுப் பேசி குறைகளைக் களைய வேண்டும்.
தடுப்புமுறைகள்: ஒற்றைத் தலைவலி எதனால் ஏற்பட்டது என்று அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு உட்பட்டபோது தலைவலி ஏற்பட்டிருக்கும். அதுபோன்ற சூழலைத் தவிர்ப்பது நலம். சில பொருட்கள், வாசனைகள் ‘அலர்ஜி’யாகி தலைவலியைக் கொடுத்திருக்கும். அவற்றைத் தவிர்த்து முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளலாம்.
 ருந்துகள்: அதிக அளவில் மருந்து எடுத்துக்கொள்வதும் சிலருக்கு தலைவலி வரக் காரணமாக இருக்கும். இதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment