Translate

Wednesday, April 2, 2014

கிட்னி அறிந்ததும் அறியாததும்!


                             “ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்…” என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் இதோ:-
யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.