Translate

Thursday, April 18, 2013

ஒயிட்னர் தயாரிக்க தடை



                   அலுவலகங்களில் டைப் செய்த கடிதத்தில் திருத்தம் செய்யவும், காகிதத்தில் பட்ட மையை அழிக்கவும் ஒயிட்னர், இங்க் ரிமூவர் போன்றவற்றை பயன்படுத்துவது வழக்கம். அனைத்து ஸ்டேஷனரி கடைகளிலும் இது தாராளமாக குறைந்த விலையில் கிடைக்கிறது. சிலர் இதை போதை பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.    ஒயிட்னரை நேரடியாகவும், கைக்குட்டை களில் தேய்த்து முகர்ந்தும் போதை ஏற்றி கொள்கின்றனர். 

        ஒயிட்னர் விற்பனையை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ரசாயன மை அழிக்கும் திரவம் (ஒயிட்னர்), நகப்பூச்சு அழிக்கும் திரவத்தை விற்க தடை செய்ய வேண்டும் என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகமும் அறிவுறுத்தியது. இதையடுத்து ஒயிட்னர் பாட்டில்களை தயாரிக்க மத்திய அரசு தடை விதித் துள்ளது. அந்த உத்தரவில், ‘ரசாயன மை அழிக்கும் திரவம், நகப்பூச்சு அழிக்கும் திரவத்தை பாட்டில்களில் தயார் செய்யும் நிறுவனங்கள் அதை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். சில்லரை விற்பனை நிலையங்களும் அவற்றை விற்பனை செய்ய கூடாது. 


        ஆனால் அவற்றை பேனா போன்ற சிறிய உபகரணங்களில் அடைத்து, அவற்றின் மேல் திரவத்தை நுகர்தல் மற்றும் உட்கொள்வதால் ஏற்படும் தீங்கு குறித்து எச்சரிக்கை வாசகம் எழுதி தயாரிக்கலாம். சிறிய அளவில் மட்டுமே திரவம் வெளியேறும் வகையில் அந்த உபகரணம் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

            சமீப காலமாக பள்ளி குழந்தைகளும் இங்க் ரிமூவர், ஒயிட்னர் போன்றவற்றை போதைக்காக பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக சேத்னா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும், தேசிய போதை ஒழிப்பு மையமும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒயிட்னர், இங்க் ரிமூவர் போன்றவை யRs.35 முதல் யRs.40 வரையிலான விலையில் கிடைக்கிறது. இன்றைய மாணவர்களுக்கு இந்த பணம் ஒன்றும் பெரிய தொகையல்ல. பாக்கெட் மணியாக அவர்களுக்கு இதை விட அதிகம் கிடைப்பதால், அவர்கள் எளிதாக கடைகளில் இவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

             ஒயிட்னர், இங்க் ரிமூவர் பாட்டில் மூடியை திறந்து முகர்ந்து பார்ப்பதன் மூலம் லேசான போதை ஏற்படுகிறது. சில மாணவர்கள் இதை கைக்குட்டையில் கொட்டி முகர்ந்து பார்த்து போதை ஏற்றிக் கொள்கின்றனர். வகுப்பறையிலோ அல்லது வீட்டிலோ இப்படி செய்தால் கூட யாருக்கும் சந்தேகம் ஏற்படுவதில்லை என்பதால், மாணவர்களிடையே இந்த பழக்கம் அதிகரித்து வருவதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தர்ள் கூறுகிறார்ள்.


             இது பற்றி மேலும் கூறுகையில், ‘‘ஒயிட்னர், இங்க் ரிமூவர் போன்றவை ஸ்டேஷனரி பொருட்களாக கருதப்படுவதால், பெற்றோரோ அல்லது பள்ளி ஆசிரியர்களோ இதை கவனத்தில் எடுத்து கொள்வதில்லை. இதனால், மாணவர்களிடையே இந்த பழக்கம் அதிகரித்துள்ளது. இந்த பழக்கம் முற்றி எங்களிடம் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது’’ என்றார்.


             30 ரூபாய்க்கு கிடைக்கும் ஒயிட்னரை ஒரு கைக்குட்டையில் கொட்டி முகர்ந்து பார்த்தால் அந்த போதை குறைந்தது 10 மணி நேரம் வரை இருக்கும். சிறார் குற்றவாளிகள், குடிசைப் பகுதிகள் மற்றும் தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகளிடையேயும் இந்த பழக்கம் அதிகளவில் உள்ளது.
 
            ஒயிட்னர், இங்க் ரிமூவர் மூலம் போதைக்கு அடிமையாகி சிகிச்சைக்கு வரும் 1,500 பள்ளிக் குழந்தைகளில் சராசரியாக 500 பேர் மட்டுமே இந்த கொடிய பழக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுதலை பெறுகின்றனர். மற்ற குழந்தைகள் சிகிச்சைக்கு பிறகு, சில மாதங்களில் மீண்டும் இந்த பழக்கத்துக்கு ஆளாகி விடுகின்றனர்.  

No comments:

Post a Comment