Translate

Monday, July 29, 2013

10 surprising facts about the human body

The Brain:

   

          The human body is without doubt the most complex machine ever created – and there's still so much we take for granted and don't really know about its inner workings.

Virgin Media takes a look at ten parts of the body beautiful, and finds out some amazing facts.

8 Health Reasons You Should Never Skip Breakfast

         
 Breakfast is a very important part of our diet. If you are inhabit of skipping your breakfast, here are some very important reasons why you should not.
Break-the-fast, after going hours without food you, finally get up in the morning and need lots of energy to kick start the day. Only breakfast can provide you with this energy.

Tips For Healthy Eyes


                           
Opt for the best lens for maximum visual advantage

       Eyes are among the most important of all sense organs. 80% of the information our brain receives is through our eyes. Ensure that you take the time, effort and money to buy a good pair of spectacle lenses. Remember, it’s the spectacle lenses that you look through and not the frame. Ensure that your lenses are hard coated for increased scratch resistance. Anti reflective coating helps maximum amount of light to enter our eyes

Plants that absorb noise

       


Trees and shrubs have been used for many years to reduce traffic noise from busy roads. Plants can also help to reduce background noise levels inside buildings by absorbing, diffracting or reflecting noise. Some plant species are more effective than others and the benefits are most pronounced in buildings with hard, reflective surfaces. 

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்வோம் !!!


கண்கள்:                               

                                         


கண்கள் உப்பியிருந்தால்
...

என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் 

இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை 

செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை 

கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

Thursday, July 11, 2013

இயற்கை முறையில் சுலபமான பயனுள்ள வைத்திய குறிப்புகள்




1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

Monday, July 8, 2013

பிரண்டை...!


தமிழகம் முழுவதும் தானே விளைந்து பயன்படுத்துவோரின்றி வீணே 

போவது பிரண்டை.சதைப்பற்றான நாற்கோண வடிவ தண்டுகளுடைய ஏறு 

கொடி.பற்றுக்க்ம்பிகளும்,மடலான இலைகளும் கொண்டிருக்கும்.சாறு 

உடலில் நமைச்சல் ஏற்படுத்தும்,சிவப்பு நிற உருண்டையான 

சதைக்கனிகளை உடையது.வேர்,தண்டு ஆகியவை மருத்துவகுணம் 

உடையவை,இதன் இன்னொரு பெயர் வச்சிரவல்லி.

ஒற்றைத் தலைவலியா?


பலரையும் அவதிப்படுத்துவது, ஒற்றைத் தலைவலி. அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? இதோ சில வழிகள்…
உணவு முறையில் மாற்றம்:சரியாக உணவு உண்ணாததும், ஒத்துக்கொள்ளாத சில உணவு வகைகளை உண்பதும், அளவுக்கு அதிகமாக உண்பதும் ஒற்றைத் தலைவலிக்கு முக்கியக் காரணங்களாகும். இதனால், நல்ல ஆரோக்கியமான உணவை, வேளை தவறாமல் சாப்பிட வேண்டும். பால், காய்கறி வகைகள் நல்லது. இறைச்சி வகைகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

அலர்ஜி வராமல் தடுக்க என்ன செய்யலாம் ?


             அலர்ஜி என்கிற ஒவ்வாமை பரவலாக காணப்படுகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உணவு பொருட்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றில் இருந்து ஓதுங்கியிருந்தால் அலர்ஜி பிரச்சினையே இல்லை. பொதுவாக அலர்ஜியை சில அறிகுறிகளை வைத்து அடையாளம் காணலாம்.

தங்க நகை போடணும்னு ஆசைப்படுறீங்களா?


             தங்க நகை அணிவதிலும் அதை வாங்குவதிலும் பெண்களுக்கு அலாதி ஆர்வம்தான் சவரன் எத்தனை ஆயிரம் விற்றாலும் பரவாயில்லை மாதத்திற்குஅல்லது வருடத்திற்கு இத்தனை பவுன் சேர்த்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள்.
தங்க நகை அணிவது அழகுக்காக என்பதை விட அது ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நம்முன்னோர்கள்.

உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ?


சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

வாய்ப்புண் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?


                                   வாய்ப்புண் தொந்தரவால் பலர் அடிக்கடி அவதியுறுபவர். அனைவருக்குமுள்ள ஒரு பொதுவான விஷயம் என்றாலும் அவதி… அவதிதான். தெரியாதவர்கள் “இதுக்கு போயி பெரிசா அலட்டிக்கிறே!” என்றால் “வாய்ப்புண் உனக்கு வந்தா தெரியும்!” என்பர். பாதிப்படைந்த சிறிய பகுதி என்றாலும் அந்த அளவிற்கு முகத்தை வாட வைக்கும் இந்த வாய்ப்புண் பற்றிச் சில விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மட்டுமின்றி, பாதிப்படைந்தவர்களுக்கும் உதவிடலாமே?  

30 வகை எண்ணெய் இல்லாத சமையல்



”எதுக்குத்தான் இப்படி எண்ணெயைக் கொட்டி கத்திரிக்காயைச் சமைப்பியோ..?!” என்று தெறித்து ஓடும் அளவுக்கு பலரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது, உணவில் மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் எண்ணெய்!

எண்ணெய் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தியே விதம்விதமான சமையல் இருக்கத்தான் செய்தது. எள்ளு தாத்தா-எள்ளு பாட்டியிடம் (உயிரோடு இருந்தால்) கேட்டுப் பாருங்கள்… பல தலைமுறைகளாக தாங்கள் சப்புக்கொட்டி, ரசித்து, ருசித்து சாப்பிட்டு, நோய் நொடியில்லாமல் வலம் வந்த அந்த ரகசியத்தைச் சொல்வார்கள்!

இரத்தத்தைச் சுத்திகரிக்கும் காளான்!


காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.

காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள்!



[ சித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் ] 

தற்போது மேலை நாடுகளில் பசும்பாலை நெருப்பில் வைத்து காய்ச்சாமல் பச்சை பால் உண்ணும் முறை என்பது வேகமாக பரவி வருகின்றது.இதில் ஏராளமான நன்மைகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். 

பொதுவாக இன்று நம்மிடையே பால் என்பது பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு இரசாயண முறையில் பதப்படுத்தப்பட்டு நமது தேவைக்கு விற்கப் படுகின்றது. இதில் சில தீமைகளும் சேர்ந்தே உள்ளது.அதாவது Pasteurization என்னும் சுத்தி கரிப்பு என்பது குறிப்பிட்ட அளவில் பாலை கொதிக்க வைத்து பாக்டீரியாவை அளிக்கும் முறையாகும்.இம் முறையால் பாலில் உள்ள Vitamin C - 20% சதவீதம், Vitamin B1 10% சதவீதம் அழிந்து விடுகின்றது. மேலும் பாலில் உடலுக்குத் தேவை யான நன்மை செய்யும் பாக்டீரியாவும் அழிந்து விடுகின்றது. இதனை உணர்ந்த மேலை நாட்டினர் Pasteurization முறையில் சுத்தி செய்யாத பாலை உண்ண விரும்புகின்றனர். 

முகப்பரு வர காரணம் – தடுக்கும் வழிமுறைகள்!


            பெரும்பாலான பெண்களின் முகத்தில் பருக்கள் தோன்றி, முக அழகை பாதிக்கின்றன.உடலில் இருக்கின்ற கழிவு, அதிகப்படியான உள்ளிடை சுரப்பு போன்றவற்றால் பருக்கள் உருவாகிறது. அதிகப்படியான ஹார்மோன் சுரக்கையில், அது தோலின் வழியே வெளியேற முற்படும்போது பருக்கள் ஏற்படுகிறது.
பித்தம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரும். அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் உஷ்ணம், தூசி கலந்து பருக்களை உண்டாகலாம். எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால், பருக்கள் வரலாம். சருமத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால், பருக்கள் வரும். பெரும்பாலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உடலில் உஷ்ணம் அதிகரிப்பதாலும் பருக்கள் வரலாம்.

செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள்!


              ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு. இதைத் தவிர வேறு எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவள் உறவைத் தவிர்க்க வேண்டும்…?
* கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.

தாம்பத்ய உறவும் நோயெதிர்ப்பு சக்தியும்…..

                       

                            நமக்குள் இருக்கும் ‘இந்த நோய் எதிர்ப்புச் சக்தி’யின் அளவை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். சமீபத்தில் இது விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தின் பிரபல செக்ஸாலஜிஸ்டான டாக்டர் நாராயண ரெட்டி என்ன சொல்கிறார் பாருங்கள்…
கணவனும் மனைவியும் மகிழ்வாக இருக்கும் தாம்பத்யத்தில்… குறிப்பாக அவர்களுக்குள் ரெகுலராக தாம்பத்ய உறவு (வாரம் ஓரிரு முறை) இருந்து கொண்டிருந்தால், அவர்கள் உடம்பின் நோயெதிர்ப்பு சக்தி கிட்டத்தட்ட 30% அதிகரிக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆறு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இருநூறு ஜோடிகளை வைத்து ஆய்வு செய்து அவர்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை கண்டறிந்த போது கிடைத்த ரிசல்ட் இது!…