Translate

Monday, February 18, 2013

வெள்ளரியின் சிறப்புகள்


        
               கோடையில் நம்மை தாக்கக்கூடிய வெயில், வெம்மை, நாவறட்சி, சரும பிரச்சனை, தோல் சம்பந்தமான பிரச்சனை என பல்வேறு தொல்லைகளை நாம் வெல்லுவதற்கு பல வழி முறைகளைக் கையாள வேண்டி இருக்கிறது. 

      
           குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் நீர் சத்துகள் நிறைந்ந ஆகாரங்கள் என பல்வேறு முறைகளைப் பின்பற்றுகிறோம். எனினும் நம்மால் முழுமையாக கோடையை சமாளிக்க முடிவதில்லை. 

                    கோடைத் தொல்லைகளை வெல்வதற்கு வெள்ளரி பிஞ்சுகளும் உறுதுணையாக இருக்கின்றது. சாப்பிடுவதற்கு ருசியாகவும், மிகவும் குளிர்ச்சி பொருந்திய தன்மைகளைத் கொண்டது வெள்ளரிக்காய்.

வெள்ளரியில் உள்ள சத்துக்கள்:

வெள்ளரிக்காயில்
நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புக்கள், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்களும், வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை அடங்கியுள்ளது.

வெள்ளரியின் பயன்கள்

வெள்ளரிக்காய் வயிறு எரிச்சலை கட்டப்படுத்துகிறது, மேலும் செரிமானத்துக்கு வெள்ளரிகளை சாப்பிட்டால் எளிதில் பலன் கிடைக்கும்.  
  1. வெள்ளரிச்சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம் பெறும். 
  2. வெள்ளரிச்சாறுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்து, ஊறிய பின் கழுவி வர முகம் பளபளப்பாகி அழகு பெறும். 
  3.  வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி, நீர் எளிதில் பிரியும். வெள்ளரிப் பழத்தை அரைத்து பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும். 
  4.  வெள்ளரிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட வயிற்று நோய், தொண்டை நோய்கள் தீரும். 
  5. இளநீருடன் வெள்ளரித் துண்டுகளை கலந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு நீங்கும். 
  6. வெள்ளரி இலைகளை நீரிலிட்டு காய்த்து வடிகட்டி, இளநீரில் கலந்து மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட வயிற்றுப் போக்குத் தீரும். 
  7.  வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி முகத்தில் வைக்க முகம் குளிர்ச்சி பெறும். தோல் சுருக்கம் நீங்கும். 
  8.  தயிர் அல்லது மோரில் வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு சாப்பிட தாகம் தீரும். அஜீரணம் நீங்கும். 
  9.  வெள்ளரிக்காய் துண்டுகளோடு தக்காளி, காரட், பீட்ரூட் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகு சேர்த்து சாலட் போல் சாப்பிட உடலுக்கு மிக நன்மை கிடைக்கும். 
  10.  வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து சாப்பிட வயிற்றுக்கோளாறுகள் மாறும். 
  11.  வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர, கோடை வெயிலால் ஏற்பட்ட முகச் சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும். 
  12. வெள்ளரிக்காயைத் தொடர்ந்து உண்டு வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். நரம்புகள் வலுப்பெறும். மஞ்சள் காமாலை குணமாகும். 
  13.  வெள்ளரியில் குறைவான அளவு கலோரி உள்ளதால் உடல் பருமனை குறைக்க சிகிச்சை எடுப்பவர்களுக்கு நல்ல பலனை தரக்ககூடியது. மேலும் வெள்ளரிக்காயுடன் விதைகளையும் சேர்த்து கொண்டால் மிக குறைந்த நாட்களில் உடல் குறைந்து காணப்படுவார்கள். 
  14.  வெள்ளரிக்காயை சிறுநீர் நோயாளிகள் சாப்பிடலாம்.   





No comments:

Post a Comment